search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துப்புரவு பணியாளர்கள்"

    ஈரோடு மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய துப்புரவு பணியாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
    ஈரோடு:

    தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய துப்புரவு பணியாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி வரும் டிசம்பர் 11ஆம் தேதி வேலை நிறுத்தம் அதைத்தொடர்ந்து உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு சுகாதார நிலைய துப்புரவு பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் சண்முகம் கூறியதாவது:

    அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு செய்துள்ள தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை தமிழகம் முழுவதும் 2,500 துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள் இவர்களுக்கு ஆயிரத்து 500 ரூபாய் சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

    தினசரி 12 மணி நேரம் பணியாற்றி வரும் இவர்களுக்கு வாரவிடுமுறையயோ பண்டிகை கால விடுமுறையோ வழங்கப்படுவதில்லை. அரசு ஆரம்ப சுகாதார மையங்கள் பணியாற்றிவரும் துப்புரவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஈரோட்டில் டிசம்பர் 11ஆம் தேதி வேலை நிறுத்தம் மற்றும் அதைத் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது இதுகுறித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பிரச்சார கூட்டங்கள் நடத்தி வருகிறோம்.

    இவர் அவர் கூறினார். #tamilnews
    கரூர் அரசு மருத்துவமனையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டடனர்.
    கரூர்:

    கரூர் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்கள் ஏராளமானவர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்தநிலையில் தங்களுக்கு கூடுதலாக பணிசுமை கொடுக்கப்படுவதாகவும், துப்புரவு பணிகளை மேற்கொள்வதோடு மட்டும் அல்லாமல் மருத்துவமனை நர்சுகளுக்கு சிலர் ஊசி எடுத்து கொடுப்பது, நோயாளிகளுக்கு கட்டு போடுவது என்கிற வகையில் எங்களை வேலை வாங்குகின்றனர். எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி எங்களுக்கு பணியை வரன்முறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி நேற்று காலை ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் ஒரு மணி நேரம் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் மருத்துவமனை அதிகாரி மணிவாசகம் உள்ளிட்டோர் நேரில் வந்து அந்த பணியாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், உங்களது குற்ற சாட்டுகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி உறுதியளித்தார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    தஞ்சையில் 14 வருடங்களாக துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.6 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படுகிறது எனவும் கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும் எனவும் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
    தஞ்சாவூர்:

    தஞ்சை வடக்கு வாசல் ரோகிணி காலனியில் வசிக்கும் துப்புரவு பணியாளர்கள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் தற்காலிக துப்புரவு பணியாளர்களாக கடந்த 14 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு மாத ஊதியமாக ரூ.6 ஆயிரம் தான் வழங்கபடுகிறது.

    இதை வைத்து எங்களது குழந்தைகளின் கல்வி கட்டணத்தை செலுத்த முடியவில்லை. மற்றும் வீட்டு வாடகை, குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம். நாங்கள் வாங்கும் ஊதியத்துக்கு மேலாக அதிகமாக வேலை பார்த்து வருகிறோம்.

    எங்களது நலனை கருத்தில் கொண்டு கூடுதல் சம்பளம் வழங்கவும், பணி நிரந்தரம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. #tamilnews
    ×